பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் நிஜ அப்பா – என்னை காரி துப்புறாங்க
பிக்பாஸ் வீட்டில் இப்போதுதான் வீட்டின் நபர்கள் வரும் டாஸ்க் ஆரம்பித்துள்ளது. இன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று பார்த்தால் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான சேரன் அவர்கள் வீட்டிற்குள் வருகிறார். இது போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாஸ் பாடலுடன் அவர் எண்ட்ரீ கொடுத்த போட்டியாளர்கள் அனைவருமே படு கொண்டாட்டமாக அவரை வரவேற்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து தற்போது அதைவிட அதிர்ச்சி தரும் விதமாக லாஸ்லியாவின் நிஜ அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். இது அணைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது வெளிவந்துள்ள அடுத்த ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை அவரை படுகேவலமாக திட்டுகிறார். அதற்கான முக்கிய காரணம் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் செய்து கொண்டிருக்கும் வேலை தான். இதனை கண்ட கவினும் கூனிக்குறுகி நிற்கின்றார். மேலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.