பிரச்சினையா? உடனே பெயரை மாற்றிக் கொள்ளும் நடிகை

பிரச்சினையா? உடனே பெயரை மாற்றிக் கொள்ளும் நடிகை

This image has an empty alt attribute; its file name is fYgXzSOMLQhHzCpKDcDEqF3s2aD.jpg

திரைப்படங்களில் அறிமுகமானபோது ரஜினி, ரேவதி, அம்பிகா போன்ற ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் என்ட்ரியாகின்றனர். அப்படி அறிமுகமான அதிதி மேனன் தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is Adhiti.jpg

இவரின் சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.

This image has an empty alt attribute; its file name is bbbde589438b3807408dfe2fb32025e0.jpg
தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார்.
This image has an empty alt attribute; its file name is Actress-Adhiti-Menon-images-2.jpg

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டு மல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.

This image has an empty alt attribute; its file name is images

அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is Actress-Adhiti-Menon-62.jpg

இந்நிலையில் அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்தேனே தவிர, திருமணம் செய்ய வில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

This image has an empty alt attribute; its file name is Dinesh-Aditi-Menon-in-Kalavani-Mappillai-Movie-Images-HD.jpg

காதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மன உளைச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் அபிசரவணன், தொடர்ந்து சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தன்னுடைய இயல்பையும், பெயரையும் மாற்றாமல் சினிமாவில் அபி பயணிக்கும் அதே நேரத்தில், அதிதியோ, தற்போது வேறு ஒருபெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is Aditi-Menon-in-Kalavani-Mappillai-Tamil-movie-stills-3.jpg

ஏற்கனவே 3 முறை பெயரை மாற்றியிருக்கும் அதிதி, இந்த காதல் திருமண பிரச்சினையைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதோடு, வழக்கபோல பிரச்சினைக்குப் பிந்தைய பெயர் மாற்றம் போல இப்போது மிர்னா மேனன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பெயரில்தான் தற்போது மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is actress_adhiti_in_traditional_saree_photoshoot_stills_01.jpg

அதுமட்டுமல்ல பழைய பெயர்களைச் சொல்லி யாராவது கூப்பிட்டாலும், அது தனது காதுகளில் விழுந்தாலும் கூட, திரும்பிக்கூட பார்க்காமல் இருந்து விடுகிறாராம். தனது புதிய பெயரை அழைத்தால்தான் தான் திரும்பி பார்ப்பேன் பேசுவேன் என்றும் அடம்பிடிக்கிறாராம்.

#அதிதி_மேனன், #அபி_சரவணன், #Aditi_Menon, #Abi_Saravanan, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *