கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

கவுண்டமணி போர்க்கொடி – சிக்சர் திரைப்படத்திற்கு எதிராக

This image has an empty alt attribute; its file name is photo.cms

அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தில் வைபவ் நடித்திருக்கிறார். இப்படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ், வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். பல்லக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் வைபவ் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். இதே போல் கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி ‘சின்னதம்பி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்சர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *