ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை – வீடியோ

ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை – வீடியோ

ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை – வீடியோ

நான் விரும்பி கேட்கும் பாடல்கள் பழைய மற்றும் இடைப்பட்ட‍ காலத்தில்

வெளி வந்த பாடல்களைத்தான். புதிய பாடல்கள் எனக்கு பிடிக்காது. காரணம்

பழைய பாடல்களிலும் இடைப்பட்ட‍ காலத்து பாடல்களிலும் நல்ல‍ கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும், அதன் மெட்டும் இதமானதாகவும் இருக்கும். எல்லாவற் றையும்விட வார்த்தைகள் புரியும்படியாகவும் இருக்கும். இதன்காரணமாகவே நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பேன். சமீப காலத்தில் வரும் பாடல்கள் கேட்கும் படியாகவும் இல்லை. வார்த்தைகளை என்ன‍தான் உன்னிப்பாக கவனித்தும் வார்த் தைகள் புரியும் படியாகவும் இல்லை. அதனால் புதிய பாடல்களை நான் வானொலி யில் கேட்பதோ அல்ல‍து தொலைக்காட்சிகளில் பார்ப்ப‍தோ கிடையாது.

புதிய பாடல்கள் வரிசையில் மாரி 2 திரைப்படப்பாடல்களை என் நண்பன் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது ‘ஏய் கோலிசோடாவே கறிக்கொழும்பே” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் அவனிடம் என்ன‍டா இது பாட்டு, இதைப் போய் கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அவனை கேலி செய்தேன்.

நான் தொலைக்காட்சிகளில் செய்திகளையும், விவாத நிகழ்ச்சிகளையும் விரும்பி பார்ப்பேன். அவ்வ‍ப்போது நல்ல‍ திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது அவற்றையும் பார்ப்பேன். ஒரு நாள் ஒவ்வொரு அலைவரிசை யாக‌ ரிமோட் மூலம் மாற்றிக் கொண்டே வரும்போது யதேச்சையாக, Sun Music அலைவரிசை வரும்போது ரிமோட் வேலை செய்யவில்லை. அப்போது மாரி 2 திரைப்படத்தில் இருந்து ஏய் கோலி சோடாவே கறிக்கொழும்பே என்ற பாடல் ஒளிபரப்பானது. அப்பாடலில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்ல‍வியும் ஆடும் நடனத்தை பார்த்தேன். என்ன‍ ஒரு அற்புதமான நடனம்.

நடிகர் தனுஷ், ஏற்கனவே திருடா திருடி படத்தின் மூலம், தான் ஒரு சிறந்த Dancer என்பதை நிரூபித்து விட்டார். ஆனால் நடிகை சாய் பல்ல‍வியின் நடனம் உண்மையில் என்னை பிரம்மிக்க வைத்தது. அந்த பாடலில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்ல‍வியை தனது கைகளால் தூக்குவார் அப்போது சாய் பல்லவி அவரது கைகளில் இருந்தவாறே ஒரு சுற்று சுற்றுவார். பாருங்கள். ஐயோ நடிகை சாய் பல்ல‍விக்கு இருப்ப‍து உடலா? அல்ல‍து ரப்பரா? இப்ப‍டி வளைகிறதே! அன்று முதல் நான், தினமும் ஒரு முறையாவது அந்த பாடல் காட்சியை யூடியூப்-ல் பார்ப்ப‍து என் வழக்க‍மாகி விட்ட‍து. இதனால் ஒரே டேன்ஸில் என்னை அவரது ரசிகனாக மாற்றிய நடிகை சாய் பல்லவிக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#SaiPallavi #Maari #Mari #vidhai2virutcham #நடிகை #சாய்பல்லவி #மாரி #ஏய்கோலிசோடாவேகறிக்கொழும்பே

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *