
வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்
வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்
‘தெய்வமகள்’, ‘லட்சுமி’ உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல்

நடிகை வாணி போஜனுக்கும் வெள்ளித் திரையில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. நடிகர் வைபவ் ஜோடியாக ‘N 4 ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா… தெலுங்கில் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகி யாக மாறியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, ‘விஜய் தேவர கொண்டா நடித்து வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். சமீர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை வாணி போஜன் கூறியபோது, தமிழ் மொழியில் பல சீரியல்கள் நடித்ததால் தமிழ் மொழி பேசுவது சிரமம் இல்லை என்றாலும் தெலுங்கில் பேச சிரமப்பட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பலர் தமிழில் பேசி ஒத்துழைப்பு கொடுத்தனர். தெலுங்கு படத்தின் வசனங்களை மனப்பாடம் செய்து ரிகர்சல் பார்த்து நடித்து முடித்தேன். இதுஒரு புதிய அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாணி போஜன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கதாநாயகியாக மாறியுள்ளார்.
