நந்திதா ஸ்வேதா – டூப் இல்லாமல் அதிரடி

டூப் இல்லாமல் அதிரடியில் இறங்கிய நடிகை நந்திதா ஸ்வேதா

தமிழில் உப்புக் கருவாடு திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப் பட்டி உட்பட சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது இவரது உருவாகி வரும் படம் IPC 376. ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் இது உருவாகி வருகிறது.

ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிகை நந்திதா ஸ்வேதா டூப் இல்லாமலே நடித்திருக்கிறார். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் குறிக்கிறது.

மேலும் இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டமாக பின்னணி வேலைகளை படக்குழுவினர் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.

நந்திதாஸ்வேதா, #Nandita_Swetha, #IPC376, #உப்புக்கருவாடு, #இதற்குத்தான்ஆசைப்பட்டாய்_பாலகுமாரா, #முண்டாசுப்பட்டி, #விதை2விருட்சம், #Uppukaruvedu, #Idharkuthane_Aasaipattai_Balakumara, #Mundasupatti, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *