இந்த‌ நடிகையின் அதிர்ச்சிகரமான‌ முடிவு

இந்த‌ நடிகையின் அதிர்ச்சிகரமான‌ முடிவு

தமிழ், தெலுங்கு மலையாள மொழித்திரைப்படங்களில் நடித்து வருகிறவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடக்கத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்து அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற‌ தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.

அதன்பிறகு அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாட வா, அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, காதலை, பறந்து செல்ல வா, ஜோமொண்டே சுவிசேசங்கள், முப்பரிமாணம், கட்டப்பாவ காணோம், சகவு, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், டாடி, இலட்சுமி, சாமி 2, செக்கச்சிவந்த வானம், வட சென்னை, கனா, மெய், நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய திரைரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்து விட்டார். தற்போது மணிரத்னம் இயக்க்த்தில் பொன்னியின் செல்வன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவுசெய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்.

#Aishwarya_rajesh, #ஐஸ்வர்யா_ராஜேஷ், #Aishwarya, #rajesh, #ஐஸ்வர்யா, #ராஜேஷ், #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #70mmstoryreel

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *