கோரோனா தடையால் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம்

கோரோனா தடையால் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம்

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென குறிப்பிட்ட ரசிகர்களை கொண்டிருப்பவர்தான் இந்த நடிகை. அந்த நடிகை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிஸியாக இருப்பவர்தான் நடிகை மகிமா நம்பியார். தற்போது கோரோனா வைரஸ் பாதிப்பால் 144 தடை உத்தரவால் இந்தியா முழுவதுமே முடங்கி இருப்பதால், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நடிகை மகிமா நம்பியார். வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இந்த ஓய்வு காலத்தில் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப்பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மகிமாவோ, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் ஓவியம் வரைவ‌தில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார். தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிறது.

அவர் இதுகுறித்து கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.

#ஓவியர், #Mahima_Nambiar, #மகிமா_நம்பியார், #குற்றம்_23, #புரியாத_புதிர், #கொடிவீரன், #அண்ணனுக்கு_ஜே, #மகாமுனி, #விதை2விருட்சம், #Oviyar, #Artist, #Kuttram_23, #Puriyatha_Puthir, #Kodi_Veeran, #Annanukku_Jey, #Maga_Muni, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *