5 நாயகிகளுடன் பிரபுதேவா போட்ட குத்தாட்டம்

5 நாயகிகளுடன் பிரபுதேவா போட்ட குத்தாட்டம்

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். சைக்கோ திரில்லர் திரைப்படமாக இது உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா பீதியால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் மொத்தம் 5 நாயகிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் 3 பேர் புதுமுக நாயகிகள் என தகவலோடு, ஒரு கனவு பாடலில் மேற்சொன்ன 5 கதாநாயகிளுடன் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறாராம் பிரபுதேவா என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

#பிரபுதேவா, #பஹிரா, #அமைரா, #காயத்ரி, #சைக்கோ_திரில்லர், #பாலிவுட், #யங்_மங்_சங், #பொன்_மாணிக்கவேல், #விதை2விருட்சம், #Prabhu_Deva, #Bagheera, #Amayra, #Gayathri, #Psycho_Thriller, #Bollywood, #Yung_Mung_Chung, #Pon_Manickael, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #5_நாயகிகளுடன்_குத்தாட்டம்_போட்ட_பிரபுதேவா

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *