ப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து

ப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து

கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால் பல்வேறு நாடுகள் பற்பல நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன• அந்த வகையில் நமது பாரத பிரதமர் க‌டந்த மாதம் 22ஆம் தேதிமுதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு 144 தடை விதிக்கப் பட்டுள்ள‍து. இதனால் வெளியில் செல்வதற்கு பயந்து பலர், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இதில் பல பிரபலங்கள், புத்த‍கம் படிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஓவியம் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது, விளையாட்டு ஆகிவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் நான்கு எழுத்து நடிகையோ சற்று வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் பொழுதை போக்கி வருகிறார். அது என்னவென்றால், நான்கைந்து பவுன்சர்களை பணிக்கு அமர்த்தி, வீட்டிற்குள்ளும் தனது தோட்டத்திலும் அவர்களின் தோள்களிலும், முதுகையிலும் இடுப்பிலும், இன்னபிற வகையிலும் அமர்ந்து கொண்டு ஜாலியாக‌ மனித சவாரி செய்து வருகிறாராம்.

எனக்கு தெரிந்த மூத்த‌ பத்திரிகையாளர் ஒருவர் (அவர் திரைப்படங்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பவர்), அந்த நடிகையின் உறவினர், இவரது நண்பர். அவர் இந்த நடிகையின் வீட்டில் இருப்பதாக அறிந்து அவரை பார்க்க, அந்த நான்கு எழுத்து நடிகையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே, அந்த நடிகையின் வேலையாள் ஒருவர், அவரை தோட்டத்தில் அமர வைத்துவிட்டு, அந்த நடிகையின் உறவினரை அழைத்து இருக்கிறார். அப்போது அங்கே ஒரு பௌன்சர், தனது தோள்களில் அந்த நடிகையை தூக்கிக் கொண்டு இங்கும் அங்குமாக சுற்றி சுற்றி வருகிறார் கூடவே மூன்று நான்கு பவுன்சர்கள் வேறு.

இந்த மூத்த பத்திரிகையாளர் இந்த வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இவரது நண்பர் வந்துவிட்டார். தனது நண்பரிடமே இது என்னப்பா இது என்று கேள்வி எழுப்ப, அதற்கு அந்த நண்பரோ, கோரோனா ஊரடங்கு தடையால், வீட்டிற்குள்ளேயே எவ்வளவு நேரம்தான் முடங்கி கிடக்கிறது என்று சொல்லி, பொழுது போகவே, சம்பளத்திற்கு பவுன்சர்களை வேலைக்கு வைத்து, இதுமாதிரி மனித சவாரி செய்றாங்க என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த மூத்த பத்திரிகையாளர் தலையில் அடித்துக் கொண்டாராம். இன்று காலை வேறுவேலையாக என்னை கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்த போது இந்த தகவலை எனக்கு வருத்தத்தோடு தெரிவித்தார். அந்த நடிகை யாரென்று அவர் எனக்கு சொல்லவில்லை நான் கேட்கவுமில்லை ஆனால் சூசகமாக நான்கு எழுத்து நடிகை என்று மட்டும் சொன்னார்.

#நடிகை, #சவாரி, #மனித_சவாரி, #தோள்கள், #தோள், #இடுப்பு, #கோரோனா, #கோவிட்19, #விதை2விருட்சம், #Actress, #rider, #human_rider, #shoulder, #shoulders, #hip, #corona, #Covid_19, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *