நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதிர்ச்சி – பாஜக பிரமுகருடன் திருமணமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதிர்ச்சி – பாஜக பிரமுகருடன் திருமணமா?

இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ச்சியாக தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி நடிந்த நெற்றிக்கண் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் தெலுங்கில் மகா நடிகை என்ற பெயரில் வெளிவந்த மறைந்த சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஒரு மிகச்சிற்ந்த குணச்சித்திர கதாநாயகி என்பதை ஆணித்தரமாக திரையுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். தமிழ் மட்டுமல்ல‌, தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கீர்த்தியின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்ப தாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இது குறித்து எந்த விளக்கமோ அல்லது மறுப்போ இதுவரை வரவில்லை.

#கீர்த்தி_சுரேஷ், #keerthy_suresh, #கீர்த்தி, #சுரேஷ், #keerthy, #suresh, #நடிகை, #நடிகையர்_திலகம், #விதை2விருட்சம், #actress, #nadigaiyar_thilagam, #vidhai2virutcham, #bjp, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *