மணப்பெண் ஆகிறார் நடிகை சுனைனா – அடுத்த மாதமே

மணப்பெண் ஆகிறார் நடிகை சுனைனா – அடுத்த மாதமே

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழித் திரைப்படங்களிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை சுனைனா இவர், நடிகை தேவயானியின் தம்பி நகுலுடன் ஜோடியாக ‘காதலில் விழுந்தேன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாசிலாமணி, சமர், வன்மம், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, தொண்டன், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘டிரிப்’ என்ற படத்திலும் கதாநாயகியாக‌ நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம், வரும் ஜூலை மாதம் திரையரங்குகளை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி நடிகர் கிருஷ்ணா, கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து விட்டார். இந்நிலையில் தான் ‘வன்மம்’ திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவும், நடிகை சுனைனாவும் இணைந்து நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போதே இருவருக்கு மிடையே காதல்தீ பற்றிக்கொண்டதாக அப்போதே பரபரப்பாக பேசப் பட்டது. ஆனாலும் இதனை இருதரப்பிலிருந்தும் மறுப்போ, விளக்கமோ எதுவும் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்து உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் கிருஷ்ணா, நடிகை சுனைனா இருவரும் ஜோடிபோட்டு ஊரைச் சுற்றிக் கொண்டு காதலில் தீவிரமாக மூழுகியுள்ளதாக தெரிகிறது. இவர் இருவரும் இன்னும் 2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதான சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது. ஆனால் முன்புபோலவே சுனைனா தரப்பில் இருந்தும் கிருஷ்ணா தரப்பில் இருந்தும் இதுவரை இதனை இருவரும் மறுக்கவோ அல்லது விளக்கமோ கொடுக்கப்படவில்லை.

#சுனைனா. #கிருஷ்ணா. #Sunaina. #krishna. விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seed2tree, #seedtotree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *