நான் ஓரங்கட்டப் படுகிறேன் அது எனக்கு சோர்வைத் தருகிறது – நடிகர் பிரசன்னா

நான் ஓரங்கட்டப்படுகிறேன் அது எனக்கு சோர்வைத் தருகிறது – நடிகர் பிரசன்னா

ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி, மெல்ல மெல்ல பல‌ திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரசன்னா. அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் நடிகை ஸ்நேகா வுடன் சேர்ந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்ம‍தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகை ஸ்நேகா கழுத்தில் நடிகர் பிரசன்னா மூன்று முறை தாலி கட்டினார் என்பதுதான். அஞ்சாதே என்ற திரைப்படத்தில் படுபயங்கரமான, வித்தியாச மான கெட்டப்பில் வரும் பிரசன்னா சிறிது காலம் வில்லன் கதாபாத்திரத்திற்கு இடைவெளி விட்டு தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். இன்று அவர் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்ததாவது:-

தல அஜித் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ரசிக்கும் ஹீரோ அவர்தான். அவருக்கு நான் வில்லனாக நடிக்க ஆசை உள்ளது. தளபதி விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்து அதனை மறுக்காமல் மகிழ்ச்சியுடன் நடிப்பேன். நடிகர் விஷால் எனக்கு நல்ல நண்பர், இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறேன். இந்த மாற்றமானது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. கதாநாயகனாக நடிக்க இப்போது மூன்று படங்களை தேர்வு செய்து இருக்கிறேன். எந்த படம் முதலில் தொடங்கும் என்று தெரிய வில்லை. கொரோனாவால் பட வேலைகள் பாதித்துள்ளன. ஓரங்கப்ட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. முன்னால் நிற்க விரும்புகிறேன். அந்த இடத்தை அடைவேன். புதிய இயக்குனர்கள் படங்களில் கதையை பொறுத்து நடிக்க ஒப்புக் கொள்கிறேன். ஊரடங்கை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறேன். ஓவியம் வரைகிறேன். குழந்தைகளுடன் சேர்ந்து பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார்.

#பிரசன்னா, #Prasanna, #அஜித், #விஜய், #தல, #தளபதி, #விதை2விருட்சம், #Ajith, #Vijay, #Thala, #Thalapathy, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *