வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள்

வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள்

நடிகை வனிதா, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சினையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.அந்நிகழ்ச்சியில் பிரபலமானார். பிக்பாஸ் குடும்பத்தினர் மற்ற அங்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் வத்திக்குச்சி வனிதா.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரிய வந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சி யின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில் தற்போது சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் முதல் வீடியோவே கொரோனவை ஒழிக்க கஷாயம் செய்து காட்டுகிறார். இதில் வனிதாவுடன் ஷிவாங்கியும் களத்தில் இறங்கியுள்ளார். முதல் வீடியோவே professional ஆக இருப்பதாக கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வனிதா அக்காவின் ரசிகர்கள். இந்நிலையில் சேனல் ஆரம்பித்த ஒரே நாளில் 10,000 பேர் subscriber செய்துள்ளதாக கூறி அருண் விஜய் மற்றும் தனது சகோதரிகளை அனைவருக்கும் டேக் செய்துள்ளார். வனிதாவின் இந்த அசுர வளர்ச்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

#வத்திக்குச்சி, #வனிதா, #நடிகை, #பிக்பாஸ், #யூடியூப் சேனல், #வீடியோ, #விதை2விருட்சம், #Vathikuchi, #vanidha, #actress, #biggboss, #Youtube, #Channel, #video, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *