தமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து

தமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து

தொடக்கத்தில் பல குறும்படங்களில் நடித்து, தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்ந்து தமிழ் நடிகை ஒருவரும் விலகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி ஆகிய‌ ஐந்து மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம்தான் புஷ்பா. சமீபத்தில் ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய சேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் இதிலிருந்து விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இது குறித்த‌ அதிகாரபூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை.

#விஜய்_சேதுபதி, #புஷ்பா, #Vijay_Sethupathi, #pushpa, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *