யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

நடிகையர் திலகம், சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, குமாரி கலா, தேவதை தேவிகா உட்பட பல நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்திருப் போம். ஒரு வசனம் என்றாலோ ஒரு பாடல் என்றாலோ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பொருளை உணர்ந்து அந்தந்த வார்த்தைகளுக்கேற்ப முக அசைவில் கண்களில், வாயசைவில் புருவத்தில், கன்னத்தில் போன்றவற்றில் பாவத்தை உட்புகுத்தி நவரசத்தையும் பொழிந்திருப்பர். அவர்களின் வீடியோக்களை இன்றுகூட‌ பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களின் நடிப்பினை ரசிப்பது அவர்களின் நடிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். உதாரணமாக சில நடிகைகளை இங்கு குறிப்பிடலாம். பராசக்தி திரைப்படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடலில் குமாரி கலா அவர்களும், பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில் தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலில் கே.ஆர். விஜயா அவர்களும், நவராத்திரி திரைப்படத்தில் தெருக்கூத்து பாடலில் நடிகை திலகம் சாவித்திரி அவர்களும், தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? என்ற பாடலில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும், ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் அழகே வா அருகே வா என்ற பாடலில் தேவதை தேவிகா அவர்களும் எவ்வளவு அற்புதமாக நடித்திருப்பர். ஆனால்

ஆனால் இந்த காலத்தில் உள்ள நடிகைகளில் ஒருசிலரைத் தவிர பாடலும் புரியாமல் தமிழும் புரியாமல், அந்த வார்ரையும் புரியாமல், அதன் பாவமும் புரியாமல் வாயை மட்டும் அசைத்து விட்டு, நடிப்பு என்கிறார்கள். முகத்தில் எந்தவிதமான நடிப்பையும் வெளிப்படுத்துவது இல்லை. அவர்களும் அது தெரியவும் தெரியாது என்பது வேறு கதை. பொதுவாக

பொதுவாக டிக்டாக் நான் பார்ப்பதில்லை. அந்த டிக்டாக்கில் கடந்த மாதம் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்க ளின் நடிப்பை அப்படியே தத்ரூபமாக நடித்திருப்பார். அந்த வீடியோ ஷேர் செய்ய முடியவில்லை. தற்போது எனக்கு வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் பகிர்ந்த டிக் டாக் வீடியோவில் பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே வா என்ற பாடலின் மெட்டை மாற்றாமல் அதில் உள்ள வார்த்தை களை மாற்றி கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி, அந்த கால நடிகை குமாரி கலா அவர்களைப் போன்றே வேடம் பூண்டு, மிகவும் அற்புதமாக அந்த பாடலின் பாவத்திற்கு ஏற்றார் போல் முக அசைவில், விழி அசைவில், வாயசைவில் என்று அத்தனை புலன்களிலும் நடிப்பை பிழிந்து கொடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தவுடன் இங்கே பகிர விரும்பி இங்கே பகிர்கிறேன். இந்த வீடியோவில் உள்ள பெண் யாரென்று விவரம் தெரிய வில்லை. அவருக்கு எனது மனப் பூர்வமாக வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் விதை2விருட்சம் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீடியோவில் உள்ள பெண் யாரென்று விவரம் தெரிய வில்லை. அவருக்கு எனது மனப்பூர்வமாக வாழ்த்துக்களையும் பாராட்டுக் களையும் விதை2விருட்சம் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீடியோவில் உள்ள பெண் யாரென்று விவரம் தெரிய வில்லை. அவருக்கு எனது மனப் பூர்வமாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் விதை2விருட்சம் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரசித்த அந்த வீடியோ இதோ உங்களுக்காக

பெண்கள் டிக்டாக் பயன்படுத்தும்போது இதுபோன்ற அற்புதமாக நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர ஆபாசத்தை வெளிக்காட்டி, அதில் மறைந்துள்ள ஆபத்தை உணராமல் பகிர்வது என்பது ஒரு அண்ணனாக, ஒரு தம்பியாக, ஒரு தந்தையாக, ஒரு மகனாக‌ மிகுந்த மன‌ வேதனைப் படுகிறேன்.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 9884193081

#கொரோனா, #வைரஸ், #தொற்று, #கோவித்19, #ஓ_ரசிக்கும்_சீமானே, #டிக்டாக், #பெண்கள், #நடிகை, #குமாரி_கலா, #விதை2விருட்சம், #Corona, #Virus, #Infection, #Covid_19, #O_Rasikkum_Seemane, #TikTak, #Girls, #Actress, #Kumari_Kala, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *