அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

அதர்வாவுக்காக 66 அழகிகள் – இயக்குநர் தகவல்

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறும்போது,

“கதாநாயகன் அதர்வா முரளி, இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது. அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம். இவர் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்வார் என்பது உறுதி’’ என்கிறார், டைரக்டர் ரவீந்திர மாதவா.

#அதர்வா, #லாவண்யா_திரிபாதி, #Atharvaa, #மைக்கேல்_ராயப்பன், #விதை2விருட்சம், #Lavanya_Tripathi, #Micheal_Rayappan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #70mmstoryreel,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *