பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது அபியும் நானும் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு அம்மாவாக நடித்தவரும் 90களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகை‌ ஐஸ்வர்யாதானாம் இவர் பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம் காரணமாக இழந்துவிட்டாய். அப்போது நான் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அதனால் இந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். ’எப்படி ஒருவர் தேனைக் கொடுக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்வோமோ? அதுபோல’ எனக் கூறியுள்ளார்.

#மணிரத்னம், #அரவிந்த்சுவாமி, #மதுபாலா, #ரோஜா, #இந்தியா, #நடிகை, #லட்சுமி, #ஐஸ்வர்யா, #விதை2விருட்சம், #Maniratnam, #Aravind_Swamy, #Madhubala, #Roja, #India, #Actress, #Lakshmi, #Aiswarya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *