நடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்

நடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்

க‌டந்த 1999ஆம் ஆண்டு ஜோடியில் ஒரு துணை நடிகையாக அறிமுகமாகி பின் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக உயர்வுபெற்று அன்று தொடங்கிய நடிகை திரிஷாவின் திரைப்பயணம் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வெற்றி கதாநாயகியாக வலம்வருபவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் அவ்வளவாக பேசப்படாத நிலையில் வெளியான “96” படம் மீண்டும் இவரை புகழ்பெற செய்தது. தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்து வரும் த்ரிஷா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் அவ்வப்போது தன் படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் டிக்டாக்கில் கூட இவரது வீடியோக்கல் வைரலாக தொடங்கின.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ”சில விஷயங்களை நான் மறக்க விரும்புகிறேன். அதனால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற போதை தரும் சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க உள்ளேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். எல்லாரும் தனித்திருங்கள், பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.

இதனால் சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் அதிர்ச்சியும் சோகமும் அனைந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

#நடிகை, #திரிஷா, #ட்விட்டர், #இன்ஸ்டாகிராம், #மௌனம்_பேசியதே, #ஜோடி, #கில்லி, #எனக்கும்_உனக்கும், #96, #ஜானு, #டிக்டாக், #விதை2விருட்சம், #Actress, #Trisha, #Twitter, #Instagram, #Mounam_Pesiyadhe, #Jodi, #Gilli, #Enakkum_Unakkum, #janu, #TikTok, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *