வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

மஹா ராஷ்டிராவில் பிறந்து, தனது துள்ளலான நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை வேதிகா… இவர் தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ச்சியாக முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகர் (தோனி பட புகழ்) சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இவருக்கு மிகுந்த மன வேதனை அனைந்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“இந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று வேதனைப்பட்டேன். அவருக்கு என்ன நடந்தது. எதற்காக சாக துணிந்தார் என்பது தெரியவில்லை. எங்களையும் அவரின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த முடிந்தது. காரணம் நாங்களும் போராட்டங்களோடுதான் இருக்கிறோம். எங்களுக்கும் அவருக்கு வந்த மாதிரியான சிந்தனை வந்து இருக்கும். நாங்களும் அந்த உணர்வை கடந்து இருப்போம். ஆனாலும் போராட்டமும் மன அழுத்தங்களும் நிரந்தரம் இல்லை. அதற்காக உயிரை விடக்கூடாது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். ஒவ்வொருவர் நடிப்பை பற்றியும் கருத்து சொல்ல பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்கள். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அவரை பற்றி கொஞ்சம் யோசித்து பேசுங்கள். கிசுகிசுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

#வேதிகா, #சுஷாந்த்_சிங், #Vedhika, #Sushant_Singh, #முனி, #காளை, #சக்கரகட்டி, #பரதேசி, #காவியத்_தலைவன், #மதராஸி, #விதை2விருட்சம், #கொரோனா, #ஊரடங்கு, #தற்கொலை, #Muni, #suicide #Kaalai, #Chakrakatti, #Paradesi, #Kaviyath_Thalaivan, #Madharasi, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *