எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்

எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற மூத்த நடிகர்கள் ஆரம்பித்து இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்கும் பாடல்களை பாடியுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரே வீடியோ ஒன்று வெளியிட்டார். இந்நிலையில் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோக்ளை வெளியிட்டு வருகிறார்.
இன்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார்.
அந்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கு இடம் அளிக்கும் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல் நிலையை மருத்துவக் குழு ஒன்று 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவர் பூரண நலம்பெற்று மீண்டு வந்து பாடல்களை பாட வேண்டும் என்று பல்வேறு திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது அவரது கோடான கோடி ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
#எஸ்பிபி, #எஸ்.பி.பாலசுப்ரமணியம் #SP_Balasubramaniyam #SPB #விதை2விருட்சம் #பாடும்_நிலா_பாலு, #Padum_Nila_Balu, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seedtotree,